×

வில்லியனூர் வரதராஜ பெருமாள் கோயில் தேர் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

வில்லியனூர்: வில்லியனூர் பகுதியில் உள்ள பிரசித்திபெற்ற தென்கலை வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் தேர்திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி 19ம் ஆண்டு பிரமோற்சவ விழா கடந்த மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 29ம் தேதி கருடசேவையும், 30ம் தேதி மஞ்சள் நீர் வஸந்தோத்ஸவம் உள்புறப்பாடும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா இன்று காலை 7.30 மணிக்கு நடந்தது. இதில் தொகுதி எம்எல்ஏவும், எதிர்கட்சி தலைவருமான சிவா கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.

இவ்விழாவில் வில்லியனூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ேதரை வடம் பிடித்து கோவிந்தா! கோவிந்தா!! என்று கோஷமிட்டு இழுத்து சென்றனர். தேரானது கோயிலில் இருந்து புறப்பட்டு நான்குமாட வீதிகள் வழியாக சென்று 11 மணியளவில் மீண்டும் கோயிலை வந்தடைந்தது. திருவிழாவை முன்னிட்டு அரசியல் கட்சி பிரமுகர்கள், ெதாழிலதிபர்கள் உள்ளிட்டோர் ஆங்காங்கே அன்னதானம் வழங்கினர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் சிறப்பு அலுவலர் ராமதாஸ் மற்றும் கோயில் நிர்வாகிகள் பொதுமக்கள் செய்திருந்தனர். மேலாண்டை வீதி வழியாக வரும்போது அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதால், ஒன்றரை நிமிடம் தேர் நின்று புறப்பட்டு சென்றது.

The post வில்லியனூர் வரதராஜ பெருமாள் கோயில் தேர் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Villianur Varadaraja Perumal Temple Chore Festival ,Villianur ,Month ,Thengala Varadarajab Perumal Temple ,Villianur Varadaraja Perumal Temple Chariot Festival ,devotees ,
× RELATED புதுச்சேரி அடுத்த சேதராபட்டு...